தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் வாட்ச்

ஒன்பிளஸ் வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2021-05-14 10:29 GMT   |   Update On 2021-05-14 10:29 GMT
சபையர் கிளாஸ் கவர், கோபால்ட் அலாய் பிரேம் கொண்ட ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.


ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் வாட்ச் கிளாசிக் எடிஷன் மட்டுமே வெளியானது. தற்போது இந்த வாட்ச்-இன் மற்றொரு வேரியண்ட் கோபால்ட் எடிஷன் எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.

ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இதன் விலையும் கிளாசிக் எடிஷன் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.



புதிய கோபால்ட் எடிஷன் மாடலில் சபையர் கிளாஸ் கவர், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோபால்ட் அலாய் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ டையல் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஒன்பிளஸ் வாட்ச் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

சீன சந்தையில் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் விலை RMB1599 இந்திய மதிப்பில் ரூ. 18,250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
Tags:    

Similar News