உலகம்
உகாண்டாவில் 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு

உகாண்டாவில் 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு

Published On 2022-01-11 03:07 GMT   |   Update On 2022-01-11 03:07 GMT
உகாண்டாவில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது.
கம்பாலா :

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. ஆனால் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சுரங்களில் வேலைக்கு சென்றனர்.

இந்த விவகாரத்தில் அதிபர் யோவேரி முசெவேனி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் பள்ளிகளை திறக்க அவர் உத்தரவிடவில்லை. இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு உகாண்டாவில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக தலைநகர் கம்பாலா உள்ளிட்ட பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News