செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உயிரிழந்த 56 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2021-02-20 06:42 GMT   |   Update On 2021-02-20 06:42 GMT
உடல் நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 56 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வ. பத்மநாபன், ஐந்தாம் அணி தமிழ்வாணன், சென்னை பெண் தலைமைக் காவலர் உமாராணி, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி, கோவை பாலசுப்பிரமணி, பெரியநாயக்கன் பாளையம் பால் அலெக்சாண்டர், காட்டுமன்னார்கோவில் தலைமைக் காவலர் விநாயகம், சிதம்பரம் திலீப்குமார், ஸ்ரீமுஷ்ணம் செல்வராஜ், நெய்வேலி ஜூலியன் குமார், சின்னசேலம் ராஜ்குமார், உளுந்தூர்பேட்டை பெண் காவலர் ரதி.

காஞ்சிபுரம் தாழம்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், கூடுவாஞ்சேரி தலைமைக் காவலர் பழனிவாசன், கரூர் பால சுப்பிரமணியன், அவனி யாபுரம் முத்துப்பாண்டி, மதுரை ரெயில்வே காவலர் ரமேஷ்பிரபு, நாகப்பட்டினம் தலைஞாயிறு சிறப்பு உதவி ஆய்வாளர் வாழ்வேந்திரன், ராமநாதபுரம் வாலிநோக்கம் அழகுமலை, பார்த்திபனூர் புனிதன்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை தலைமை காவலர் காளியப்பன்; ஆயுதப்படை பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர், அழகாபுரம் வடிவேல், சிவகங்கை எஸ்.வி.மங்களம் மருதுசெல்வம், கீழசெவல் பட்டி தலைமைக் காவலர் ஜான் ஜேசுகனி, காரைக்குடி நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு காளிமுத்து, திருச்சி கோட்டை சேகரன், கே.கே. நகர் முருகேசு, திருச்சி சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் ஷேக் முகமது, திருநெல்வேலி மோப்பநாய் பிரிவு இப்ராஹிம், குழந்தை கடத்தல் எதிர்ப்பு பிரிவு அகமது அலி, திருப்பத்தூர் தலைமை காவலர் ஸ்ரீதரன், தூத்துக்குடி தெற்கு உதவி ஆய்வாளர் பிள்ளைமுத்து, முத்தையாபுரம் ராமச்சந்திரன், விளாத்திகுளம் முத்துலெட்சுமி, கயத்தாறு தங்கராஜ், திருச்செந்தூர் கோவில் கணபதி, தட்டப்பாறை நாராயணசுவாமி.

திருப்பூர் காமநாயக்கன் பாளையம் கங்காதேவி, கனியூர் செல்வராஜ், திருவாரூர் ஆயுதப்படை பிரிவு கண்ணன், செய்யார் வடிவேலன், ஆரணி தலைமை காவலர் சிவக்குமார், கீழ்ப்பெண்ணாத்தூர் அழகேசன், தண்டராம்பட்டு முருகன், களம்பூர் குப்பன், விழுப்புரம் கியூ பிரிவு ராஜேந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி காவலர்களாக பணிபுரிந்த பிரவீஷ், மனோ, இரண்டாம் அணி செல்வம், கோவை கருமத்தம்பட்டி ராஜசேகர், திண்டுக்கல் ஆயுதப்படைப் பிரிவு அருள் ஆனந்து, திருக்கழுக்குன்றம் சந்திரசேகர், புதுச்சத்திரம் செல்வராஜ், சேந்தமங்கலம் பிரகலாதன், கண்டாச்சிபுரம் முகமது அமானுல்லா ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.

உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News