செய்திகள்
கோப்புபடம்

ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்று நட வேண்டும் - சூழலியலாளர் அறிவுறுத்தல்

Published On 2021-09-14 05:44 GMT   |   Update On 2021-09-14 05:44 GMT
பிளாஸ்டிக் எனும் கொடிய அரக்கனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது.
திருப்பூர்:
 
தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட  6-வது மாநாடு கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். இணை செயலாளர் கார்த்திக் வரவேற்றார்.

ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மணி, சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.

சூழலியலாளர் கோவை சதாசிவம் பேசுகையில்:

பிளாஸ்டிக் எனும் கொடிய அரக்கனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். 

சுற்றுச்சூழலுக்கு தீமை செய்வது குற்றம்தான். நம்மால் முடிந்தால் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இல்லையேல் மரம் நடுவோருக்கு உதவ வேண்டும்.

நம் கண்முன்னே வளர்ந்து செழித்து ஒரு மரம் தரும் உணர்வு அவ்வளவு இனிமையானது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரமாவது நட வேண்டும்‘’ என்றார்.
Tags:    

Similar News