உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2021-12-29 08:05 GMT   |   Update On 2021-12-29 09:02 GMT
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
சேலம்:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் அவர் திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

எந்த நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அ.தி.மு.க. சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஓமலூர் மணி, ஏற்காடு சித்ரா, சங்ககிரி சுந்தரராஜன் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News