செய்திகள்
தடம்புரண்ட ரெயில் பெட்டிகள்

காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலி

Published On 2019-09-12 12:54 GMT   |   Update On 2019-09-12 12:54 GMT
காங்கோ நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.
கின்ஷசா:

மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் இன்று பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. காங்கோ நாட்டின் டாங்கான்கியா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் திடீரென தடம் புரண்டது.

இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அப்பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து முடங்கியது. 

தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் முதல் கட்டமாக 50 பேர் பலியாகினர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு மனிதவளத்துறை மந்திரி ஸ்டீவ் பிகாயி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News