செய்திகள்
கோப்புபடம்

டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

Published On 2021-09-14 11:09 GMT   |   Update On 2021-09-14 11:09 GMT
அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட அதிக விலைக்கு மது வகைகளை விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:

தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவோ இரவு 8 மணிக்கு பிறகோ டாஸ்மாக் கடைகளை கட்டாயமாக திறக்கக்கூடாது. அந்த நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்றால் மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

டாஸ்மாக் கடைகளில் விற்பனையின் போது பணியாளர்கள் தவிர வேறு நபர் யாரும் இருக்கக் கூடாது. அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட அதிக விலைக்கு மது வகைகளை விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் பணியின் போது கட்டாயமாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். மதுபான வகைகளை ஊழியர்கள் மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. 

டாஸ்மாக் கடையுடன் இணைந்த பார்களில் சட்டவிரோதமாக மது விற் பனை நடைபெற்றால் ஊழியர்கள் அதை போலீசாருக்கு புகார் தெரிவித்து, அதன் நகலை மாவட்ட மேலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  

டாஸ்மாக் கடையுடன் இணைந்துள்ள பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றால் கடை மேற்பார்வையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News