செய்திகள்
பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

ஆயுதபூஜையையொட்டி கரூரில் பொரி தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2021-10-12 08:15 GMT   |   Update On 2021-10-12 08:15 GMT
ஆயுதபூஜையையொட்டி கரூரில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரூர்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் பூஜை செய்யப்படும். அப்போது பொரி, அவல், நிலக்கடலை, பழ வகைகள், சர்க்கரை பொங்கல் ஆகியவை கடவுளுக்கு படைப்பது உண்டு.ஆயுத பூஜையையொட்டி கரூரில் பொரி உற்பத்தி செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

தற்போது ஒரு மூட்டை பொரி ரூ.600-க்கு விற்பனையாகி வருகிறது. சில்லரை விலையில் ஒரு பக்கா ரூ.15-க்கு விற்கப்படுகிறது. நிலக்கடலை (முதல்தரம்) ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரியை வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேடி வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் பொரி விற்பனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தற்போது நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்துபவர்கள் பூஜைகளுக்கு பாக்கெட் பொரிகளை அதிகளவில் வாங்கி செல்வதை காண முடிகிறது.



Tags:    

Similar News