உள்ளூர் செய்திகள்
வாகனமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திருப்பூர் மாநகரம்.

திருப்பூரில் இருந்து 2 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் - வெறிச்சோடி காணப்பட்ட மாநகரம்

Published On 2022-01-15 09:12 GMT   |   Update On 2022-01-15 09:12 GMT
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 6 நாட்கள் செயல்படாததால் வேலை பார்க்கும் வெளிவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
திருப்பூர்

தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள்  மற்றும் அதனை சார்ந்த நிறுவனங் கள் உள்ளன.  இதில் வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கடந்த 13ம் தேதி முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 17,18 ந்தேதிகளில் பஞ்சு, நூல் உயர்வு விலையை கண்டித்து பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 6 நாட்கள் செயல்படாததால் பனியன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.



தொடர் விடுமுறை காரணமாக திருப்பூரில் உள்ள சுமார் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. 

அதே போல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவிநாசி ரோடு குமரன் ரோடு பல்லடம் ரோடு தாராபுரம் ரோடு ஆகிய வீடுகளிலும் குறைந்த அளவே வாகனங்கள் சென்று வருகின்றன. 

மேலும் காதர பேட்டையில் உள்ள  கடைகள் மூடப்பட் டதால் அந்த பகுதியில் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் மாநகரில் டீ கடைகள் ஹோட்டல்கள் வணிக நிறுவனங்கள் என பெரும்பாலான பெரும்பாலான கடைகள்  அடைக்கப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News