செய்திகள்
கஞ்சா பறிமுதல்

போலீசார் அதிரடி சோதனை: 3 கிலோ கஞ்சா- ஆட்டோ பறிமுதல்

Published On 2019-10-05 09:00 GMT   |   Update On 2019-10-05 09:00 GMT
மதுரையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 3 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் முன்பு ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரிக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராஜ்குமார் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா, 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கரிமேடு மீன் மார்க்கெட் நேதாஜி சிலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோலைராஜூக்கு தகவல் வந்தது.

போலீசார் விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராணி (60), மருது (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை வண்டியூர் சங்கு நகர் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அண்ணா நகர் வைகை காலனியைச் சேர்ந்த ஆனந்த் (25) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா விற்றதாக அருண்பாண்டி, ஆசாரி மணி, ராஜ்குமார், ஜோதி குமார், ஆதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News