செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள்

6 பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை

Published On 2020-01-09 04:51 GMT   |   Update On 2020-01-09 04:51 GMT
பெல் நிறுவனம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி:

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்‍கு தாரை வார்த்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெல் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்‍கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், நாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல் மேலும் 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்  விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய மந்திரி ஜவடேகர் கூறுகையில், ‘மினரல்ஸ் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட், நேஷனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், பெல் நிறுவனம், ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன்,  ஒடிசா இன்வெஸ்ட்மென் கார்ப்பரேசன் மற்றும் மெகான் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை கொள்கை ரீதியாக முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என தெரிவித்தார். 

Tags:    

Similar News