முக்கிய விரதங்கள்
விஷ்ணு லட்சுமி

பாவங்களை போக்கும் ‘கைசிக ஏகாதசி’ விரதம்

Published On 2021-12-21 01:41 GMT   |   Update On 2021-12-21 01:41 GMT
இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
கைசிக ஏகாதசி விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி-மன் மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரத முறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் அருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது.

கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து வர வேண்டும். இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

கைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். கைசிக ஏகாதசியை பற்றி கேட்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். சாளக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பவுர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக ஏகாதசி விரத பலன் தரும்.

கைசிக விரதம் இருப்பவர்களுக்கு இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம் கிடைக்கும். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம் பெறலாம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.

இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.

அன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் மூதாதையர்கள் சொர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும், நாகர்களும் போற்றுவார்கள். அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.

கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் அமைந்துள்ள திருக்குளம் குப்தகங்கை என அழைக்கப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
Tags:    

Similar News