தொழில்நுட்பம்
ஒப்போ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை திடீர் மாற்றம்

Published On 2021-07-02 12:00 GMT   |   Update On 2021-07-02 12:00 GMT
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புது விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. ஒப்போ A11K, ஒப்போ A53s, ஒப்போ A15, ஒப்போ A15s மற்றும் ஒப்போ F19 போன்ற மாடல்களின் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வு குறித்து ஒப்போ சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், சந்தையில் சிப்செட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.



ஒப்போ ஸ்மார்ட்போன்கள் புதிய விலை விவரம்

ஒப்போ F19 - 6ஜிபி ரேம் ரூ. 18,990
ஒப்போ A11k ரூ. 8,990
ஒப்போ A15 - 2 ஜிபி ரேம் ரூ. 9,490
ஒப்போ A15 - 3 ஜிபி ரேம் ரூ. 10,490
ஒப்போ A15s ரூ. 12,490
ஒப்போ A53s 5ஜி - 8 ஜிபி ரேம் ரூ. 17,990

ஒப்போ மட்டுமின்றி ரியல்மி, விவோ மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கின்றன.  
Tags:    

Similar News