செய்திகள்
செக் குடியரசு நாட்டின் முன்னனி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் டாலர்கள் இழப்பு

செக் குடியரசு நாட்டின் முன்னனி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் டாலர்கள் இழப்பு

Published On 2019-08-05 11:16 GMT   |   Update On 2019-08-05 12:38 GMT
ரஷ்யா மீதான பொருளாதார தடை தாக்கத்தினால் செக் குடியரசு நாட்டின் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மடேட்டாவிற்கு 6.5 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மிலன் தெரிவித்துள்ளார்.
பராக்:

உக்ரைனில் இருந்து கிரிமியாவை பிரித்து தன்னுடன் இணைத்ததால், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தது. இந்த பொருளாதார தடை உணவுப்பொருட்கள் வர்த்தகத்தை அதிகம் பாதித்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதான பொருளாதார தடையை ஜனவரி 2020 வரை நீட்டித்துள்ளது.


இதன் காரணமாக ரஷ்யா உணவுப்பொருட்கள் மீதான பொருளாதார தடையை விதித்தது.

இது குறித்து மிலன் , எங்கள் நிறுவனத்திலிருந்து வருடத்திற்கு 1500 டன் பால் பொருட்கள் ரஷ்யா நாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது கிட்டத்தட்ட எங்களது மொத்த உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். ஆனால் உணவுப்பொருட்கள் மீது ரஷ்யா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக தற்போது 6.5 மில்லியன் டாலர்கள் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News