ஆன்மிகம்
கோர்க்காடு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா

கோர்க்காடு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2020-08-01 07:08 GMT   |   Update On 2020-08-01 07:08 GMT
வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. கோவிலின் முன்பு அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேர் வீதிஉலா செல்லாமல் கோவில் முன்பே நிறுத்தப்பட்டு இருந்தது. மாலையில் கோவில் வளாகத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News