உள்ளூர் செய்திகள்
கிரிக்கெட் போட்டியில் மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா பேட்டிங் செய்த காட்சி.

தாகூர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட்போட்டியில் பேட்டிங் செய்து உற்சாகத்தை ஏற்படுத்திய மத்திய மந்திரி

Published On 2022-01-12 09:14 GMT   |   Update On 2022-01-12 09:14 GMT
கிரிக்கெட்போட்டியை பேட்டிங் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்.
சேதராப்பட்டு:

புதுவை பா.ஜனதா இளைஞரணி சார்பில் மாநில அளவிலான நமோ கிரிக்கெட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 கடந்த 8-ந் தேதி தொடங்கிய கிரிக்கெட் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.  4-வது நாள் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்வையிட மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா வந்தார். அப்போது விளையாடிய அணிகளுக்கு டாஸ் போட்டார். டாஸ் வென்ற அணியினர் பேட்டிங் செய்தனர்.

அப்போது மத்திய மந்திரி பேட்டிங் செய்தார். அவர் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடியது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிகழ்ச்சியில் புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி, நமோ கிரிக்கெட் போட்டியின் பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு,  ராமலிங்கம், அசோக் பாபு, பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் என்ற ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். 

நமோ கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் பா.ஜனதா மாநில இளைஞர் அணி துணைத் தலைவர்கள் உமா சங்கர், ராக் பேட்டரி பொதுச் செயலாளர் வேல்முருகன், செயலாளர் அமல்ராஜ் ஆகியோரை மத்திய மத்திரி பானு பிரதப் சிங் வர்மா  பாராட்டினார்.

Tags:    

Similar News