செய்திகள்
கொரோனா பரிசோதனை

சோளிங்கர் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-11-18 14:19 GMT   |   Update On 2020-11-18 14:19 GMT
சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோளிங்கர்:

சோளிங்கரில் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் செண்பகராஜன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர் ரவி தலைமையிலான மருத்துவ குழுவினர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் ஒலிபெருக்கி மூலம் வாகனத்தில் கொரோனா பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முககவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளருக்கு ரூ.200, கடை உரிமையாளருக்கு ரூ.500 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

இந்த முகாமில் துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர்கள் எபினேஷன், ஜெயராமன், துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News