ஆன்மிகம்
தளியில் கோதண்டராம சாமி கோவில் கும்பாபிஷேகம்

தளியில் கோதண்டராம சாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-07-12 05:42 GMT   |   Update On 2021-07-12 05:42 GMT
தளியில் கோதண்டராம சாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தளியில் கோதண்டராம சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கங்க பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை வேதபாராயணம், சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து புனித நீர் யாகசாலையில் இருந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்படடது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News