தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

எம்ஐ 11 சீரிஸ் விற்பனையில் புது மைல்கல் எட்டிய சியோமி

Published On 2021-05-24 04:17 GMT   |   Update On 2021-05-24 04:17 GMT
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா மாடல்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது.


சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச விற்பனையில் 30 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. எம்ஐ 11 சீரிசில் எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

ஒட்டுமொத்த விற்பனையில் சீனாவில் மட்டும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற விற்பனை விவரங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருக்கின்றன. 



மூன்று மாடல்களும் தனித்தனியே எத்தனை யூனிட்கள் விற்பனையாகின என்ற தகவலை சியோமி வெளியிடவில்லை. சீன சந்தையில் பல்வேறு உயர் ரக மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் சியோமி, விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர சீனா மட்டுமின்றி ஐரோப்பா உள்பட பல பகுதிகளில் வியாபாரத்தை நீட்டிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் சியோமி எம்ஐ 11 சீரிஸ் எம்ஐ 11 எக்ஸ் 5ஜி, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா 5ஜி பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 29,999, ரூ. 39,999 மற்றும் ரூ. 69,999 என துவங்குகிறது.
Tags:    

Similar News