ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கார்

ஜனவரி மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்ட ஹூண்டாய்

Published On 2021-02-02 08:01 GMT   |   Update On 2021-02-02 08:01 GMT
ஹூண்டாய் நிறுவனம் 2021 ஜனவரி மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டு இருக்கிறது.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி 2021 மாதத்தில் மட்டும் 60,105 யூனிட்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து இருக்கிறது. இவற்றில் 52,005 யூனிட்கள் உள்நாட்டிலும், 8100 யூனிட்கள் வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 23.8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 42,002 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஏற்றுமதியை பொருத்தவரை 19 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது. 



விற்பனை அறிக்கை பற்றி ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் கூறும் போது..,

“2021 ஆண்டு துவக்கத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் சிறப்பாக துவங்கி உள்ளது. புத்தம் புதிய கிரெட்டா, புதிய வெர்னா மற்றும் புதிய ஐ20 போன்ற மாடல்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.”

“இந்தியாவில் உலகத்தரம் மிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் வெளிப்பாடாக ஹூண்டாய் பிராண்டு உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கார்ப்பரேட்டாக இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஹூண்டாய் முயற்சி செய்யும்.”

என தெரிவித்தார்.
Tags:    

Similar News