செய்திகள்
எல் முருகன் வேட்புமனு தாக்கல்

பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்

Published On 2021-03-18 08:17 GMT   |   Update On 2021-03-18 08:17 GMT
பாஜக வேட்பாளர் எல்.முருகன் மனு தாக்கலையொட்டி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தாராபுரம் உடுமலை சாலை ரவுண்டானா அருகில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

அலுவலகம் அருகே சென்றதும் வேட்பாளர் எல்.முருகன் மற்றும் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிஷ்ணன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி மகேந்திரன் ஆகியோருடன் சென்று சப்-கலெக்டர் பவன் குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மனு தாக்கலையொட்டி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

வேட்பு மனுதாக்கல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கி‌ஷன் ரெட்டி, கர்நாடக அமைச்சர்கள் பசவராஜ், வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை இணை அமைச்சர் கி‌ஷன்ரெட்டி பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் சூலூர் விமான படை தளத்திற்கு சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்திறங் கினார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.


Tags:    

Similar News