செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வம் - இந்தியா அறிவிப்பு

Published On 2020-12-25 02:32 GMT   |   Update On 2020-12-25 03:35 GMT
புதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் வருகை சாத்தியமா? என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் ஏற்றுக்கொண்டிருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், இந்தியாவுக்கு வந்தபோது உறுதிப்படுத்தினார்.

ஆகவே, இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆவலாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News