கிச்சன் கில்லாடிகள்
பன்னீர் கீர்

நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர்

Published On 2021-12-14 09:15 GMT   |   Update On 2021-12-14 09:15 GMT
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டிய பால் - 3/4 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
நறுக்கிய பாதாம் பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு

செய்முறை

குங்குமப்பூவை 2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும்.

உடனே பாலையும் அதனுடன் சேர்த்து 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

ஏலக்காய் பொடி, குங்குமப்பூ பால் சேர்த்து நன்றாக கிளறவும்.

இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும்.

நன்றாக கிளறி அதை ஒரு பெளலில் மாற்றிக் கொள்ளவும்.

இப்பொழுது நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.

கொஞ்சம் குளிர விட்டு பரிமாறவும்.

சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.

Tags:    

Similar News