செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்?: பாஜக விளக்கம்

Published On 2020-09-23 02:37 GMT   |   Update On 2020-09-23 02:37 GMT
வயது முதிர்வு காரணமாக எடியூரப்பாவை நீக்கிவிட்டு புதிய தலைவர் ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்றார். வயது முதிர்வு காரணமாக அவரை நீக்கிவிட்டு புதிய தலைவர் ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 நாட்களுக்கு பிறகு, எடியூரப்பா மாற்றம் குறித்த தகவலை கர்நாடக பா.ஜனதா மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக மாநில மற்றும் தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் முற்றிலும் தவறானது. இது அடிப்படை ஆதாரமற்ற, மக்களை தவறாக திசை திருப்பும் உண்மைக்கு புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கணேஷ் கார்னிக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News