உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரி நகரில் ரூ. 7.77 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்- நகரமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

Published On 2022-05-06 09:59 GMT   |   Update On 2022-05-06 09:59 GMT
தருமபுரி நகராட்சி பகுதியில் ரூ.7.77 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தருமபுரி,

தருமபுரி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. 
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தலைமை வகித்தார் துணைத்தலைவர் நித்தியா அன்பழகன், பொறியாளர் ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், நகராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் தருமபுரி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பில் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள்,10வது வார்டு அரிச்சந்திரன் மயான வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகனமேடை, ரூ.58.50 லட்சம் மதிப்பில் கலைஞர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 திட்டப்பணிகள் ரூ.72 லட்சம் மதிப்பில் நகராட்சிக்கு 3 புதிய வாகனம் வாங்குதல், சந்தைப்பேட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் ரூ.7.77 கோடி மதிப்பில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பேசும்போது நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை முதலில் மேம்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல்  கிடக்கிறது. எனவே அந்த ஆள்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். 

அவ்வாறு  ஆழப்படுத்தினால் குடிநீர் தட்டுப்பாட்டை எளிமையாக போக்கிக்கொள்ள முடியும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து பதிலளித்த நகராட்சி ஆணையர் நிதி ஆதாரம் கிடைக்கப் பெற்றவுடன் முதலில் ஆழ்துளை கிணறு ஆழப்படுத்தும் பணி மேற்கொண்டு தண்ணீர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என தெரிவித்தார்.
Tags:    

Similar News