ஆன்மிகம்
அன்னபூரணி

அன்னபூரணி விரதம் என்றால் என்ன?- கடைபிடிக்கும் முறை

Published On 2019-10-23 08:01 GMT   |   Update On 2019-10-23 08:01 GMT
அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அன்னபூரணி விரதம் கடைப்பிடிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.
விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும். அன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் எதற்கும் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் பட்டினி, பசி, நோய், வறுமை, தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.

ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவாகும். உணவு உண்டால் தான் ஒருவர் உயிர் வாழ முடியும். அப்படிப்பட்ட அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும்.

அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு வாய்ந்தாதகும். இந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும்.

கும்பத்தில் என்றும் ஏழ்மை நிலை ஏற்படாமல் வாழ்வில் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெரும். அன்னபூரணி விரதம் கடைப்பிடிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.

அன்னபூரணி விரதம் இருக்கும் முறை

அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து உள்ளத்தூய்மையுடன் தங்கள் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு மணப்பலகையின் மீது வெள்ளை துணியை போட்டு அதன் மீது ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து அதில் அரிசி தானியங்கள் வைக்க வேண்டும்.
பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும்.
அன்னபூரணிக்கு வாசனை மலர்கள், பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் காட்ட வேண்டும் வேண்டும்.
பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.
பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும்.
இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உண்ணாமல் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு, பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.
அன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம்.எந்தவிதமான பாயாசமாகவும் இருக்கலாம். உலர் பழவகை, வாழைப்பழம், கற்கண்டு வைத்து வழிபடலாம்.
அன்ன பூரணி விரதத்தில் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்..
கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்க வேண்டும்.
நாமும் அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிராத்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம்.
Tags:    

Similar News