செய்திகள்
கோப்புபடம்

மின்திட்டங்களால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் - கலெக்டரிடம் மனு

Published On 2021-09-27 06:53 GMT   |   Update On 2021-09-27 06:53 GMT
கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு உடனடியாக தள்ளுபடி சான்றிதழ் வழங்கி நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

மின்திட்டங்களால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என திருப்பூர் கலெக்டரிடம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது:

கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு உடனடியாக தள்ளுபடி சான்றிதழ் வழங்கி நகைகளை திரும்ப வழங்க வேண்டும். திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் தராசு வழங்க தினமும் 50 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் தங்க அனுமதிக்க வேண்டும்.

திருப்பூர் தெற்கு, வடக்கு உழவர் சந்தைகள் அருகே மற்ற காய்கறி கடை இயங்குவதை தடுக்க வேண்டும். கொரோனா காரணமாக இரவு நேரம் இயங்கி வரும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டை மீண்டும் பகல் நேரத்துக்கு மாற்ற வேண்டும். 

மின்திட்டங்களால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதால் கெயில் நிறுவன பணி விவசாய நிலத்தில் நடப்பதை தவிர்க்க வேண்டும். 

இனாம் நிலங்களை உழுது வரும் விவசாயிகளுக்கு உழவர் பெயரில் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News