செய்திகள்
அமைச்சர் கந்தசாமி

பாண்லே பாலில் கலப்படம் நிரூபித்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் கந்தசாமி ஆவேசம்

Published On 2019-11-29 12:35 GMT   |   Update On 2019-11-29 12:35 GMT
புதுவையின் அரசு நிறுவனமான பாண்லே பாலில் கலப்படம் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.

பாகூர்:

கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு புரதசத்துள்ள பால் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்சாமி கலந்து கொண்டு புரத சத்து கலந்த பாலினை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில், சாக்லெட், பாதாம் சுவையில் பால் வழங்கப்பட உள்ளது.

அரசு பல சலுகைகளை மாணவர்களுக்கு செய்து தருகிறது. மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் கல்வி பயின்ற கிருமாம் பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் யாராவது ஒருவராவது ஐ.எ.எஸ்., படித்து அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

புதுவை அரசு உயர் அதிகாரிகள், மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்கள் உயர் பொருப்பில் இருப்பதால், நமது மாநிலத்திற்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்த தவறி வருகின்றனர்.

அதனால், நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ஆட்சி பணிக்கு வரவேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கு ரொட்டி பால் வழங்கும் திட்டம் தற்போது மேலும் தரம் உயர்த்தப்பட்டு பல சுவைகளில் புரத சத்து மிக்க பாலாக வழங்கும் திட்டமாக புதுவையில் தொடங்கப்பட்டுள்ளது.

புதுவையின் அரசு நிறுவனமான பாண்லே பாலில் கலப்படம் இருப்பதாக சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர். இது சம்மந்தமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News