தொழில்நுட்பம்
சாம்சங்

11,500 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் சாதனம்?

Published On 2021-09-17 11:30 GMT   |   Update On 2021-09-17 11:30 GMT
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இம்முறை டாப் எண்ட் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் டேப்லெட் 14.6 இன்ச் டிஸ்ப்ளே, 11500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடலில் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி டேப் எஸ்8 மாடலில் டி.எப்.டி. பேனல், டேப் எஸ்8 பிளஸ் மாடலில் ஒ.எல்.இ.டி. பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம்.



சாம்சங் நிறுவனம் புதிதாக மிக மெல்லிய பெசல் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களில் மிக மெல்லிய பெசல்களை வழங்க உதவும். கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது.
Tags:    

Similar News