செய்திகள்
போராட்டம்

பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம்: போலீசார் தடியடி

Published On 2020-10-30 11:13 GMT   |   Update On 2020-10-30 18:19 GMT
முன்னாள் முதன்மை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தூதரகம் பெயரை பயன்படுத்தி கேரளாவிற்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் முக்கிய காரணம் எனத் தெரியவந்தது. மேலும், இந்தத் தங்கம் கடத்தல் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் எம் சிவசங்கரை கைது செய்தனர்.

இதனால் முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பா.ஜனதாவின் யுவா மோர்ச்சா தொண்டர்கள் கோழிக்கோட்டில் உள்ள கமிஷனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் கம்பிகளை தாண்டிச் செல்ல முயன்றனர்.

ஆகவே போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர். மேலும், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது.
Tags:    

Similar News