தொழில்நுட்பம்

சர்வதேச சந்தையில் 150 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து அசத்தும் சியோமி

Published On 2018-08-23 05:25 GMT   |   Update On 2018-08-23 05:25 GMT
சியோமி நிறுவன காலாண்டு வருவாய் அறிக்கையில் சர்வதேச சந்தையில் சியோமி நிறுவன வருவாய் 150% அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. #Xiaomi


சியோமி நிறுவனம் 2018 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூன் 30, 2018 வரை நிறைவுற்ற காலாண்டில் சியோமி வருவாய் 4524 கோடி யுவான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 68.3% அதிகம் ஆகும்.

இதேபோன்று சர்வதேச வருவாய் 151.7% வளர்ச்சியடைந்து 164 கோடி யுவான்களாக இருக்கிறது. இது அந்நிறுவன மொத்த வருவாயில் 36.3% ஆகும். வியாபாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் கணிசமான வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) மற்றும் வாழ்வியல் பிரிவு சாதனங்களில் இது வேகமான வளர்ச்சி என சியோமி தெரிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் சியோமியின் நிகர லாபம் 1463 கோடி யுவான், இதில் 2018 முதல் காலாண்டு இழப்பு 703 கோடி ஆகும். வருடாந்திர அடிப்படையில் லாபம் 25.1% வளர்ச்சியடைந்துள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 58.7% வளர்ச்சியடைந்து 305 கோடி யுவான் வருவாய் பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் சராசரி விற்பனை விலை போன்றவை ஸ்மார்ட்போன் வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சியோமி நிறுவனம் 43.9% அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
Tags:    

Similar News