ஆன்மிகம்
முத்துமாரியம்மன்

முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தையா சாமி கோவில் கும்பாபிஷேகம் 20-ந்தேதி நடக்கிறது

Published On 2021-08-17 07:03 GMT   |   Update On 2021-08-17 07:03 GMT
முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தையா சாமி கோவிலில் 20-ந் தேதி காலை 8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.
முத்தியால்பேட்டை முத்தையா முதலியார்பேட்டையில் முத்து மாரியம்மன் முத்தையா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து 20-ந் தேதி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகபூஜையும், 8.15 மணிக்கு ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், காலை 8.45 மணிக்கு முத்தையாசாமி, ஸ்ரீவள்ளி முத்தையாசாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை செயலர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News