தொழில்நுட்பம்
ஹானர் டி.வி. டீசர்

பாப் அப் கேமராவுடன் 55 இன்ச் ஹானர் டி.வி. வெளீயீட்டு தேதி

Published On 2019-07-27 05:55 GMT   |   Update On 2019-07-27 05:55 GMT
ஹானர் பிராண்டு தனது புதிய டி.வி.யின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் பாப்-அப் கேமரா, 55 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.



2019 சர்வதேச மொபைல் இண்டர்நெட் கருத்தரங்கில் ஹானர் பிராண்டு தலைவர் சௌ மிங் ஹானர் டி.வி. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய ஹானர் டி.வி.யில் ஹானர் பிராண்டின் இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே சி்ப்செட், பாப்-அப் ஏ.ஐ. கேமரா மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஹானர் பிராண்டு அறிவித்த ஹானர் விஷன் சார்பில் புதிய இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே சிப்செட்டான ஹாங்கு 818 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹானர் டி.வி.யில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஹானர் டி.வி. ஸ்டான்டர்டு வெர்ஷன் மற்றும் ஹை வெர்ஷன் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இத்துடன் பாப்-அப் ஏ.ஐ. கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை சீராக இயக்க ஹைசிலிகான் என்.பி.யு. சிப் வழங்கப்படுகிறது. ஹாங்கு 818 சிப்செட்டில் ஏழு இமேஜ் பிராசசிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. 

இதுதவிர இந்த சிப்செட் 30fps வேகத்தில் 8K ரெசல்யூஷன், 120fps வேகத்தில் 4K ரெசல்யூஷன் வீடியோ டிகோடிங்கை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய சிப்செட்டுடன் ஹைசிலிகான் ஆடியோ தொழிநுட்பமும் ஒருங்கிணைக்கப்படுகிறது. புதிய ஹானர் டி.வி.க்கான முன்பதிவுகள் சீனாவில் துவங்கப்பட்டுள்ளன. சீனாவை தொடர்ந்து இந்த டி.வி. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என ஹானர் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் ஹானர் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News