செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-18 07:09 GMT   |   Update On 2020-10-18 07:09 GMT
தர்மபுரி, ஊத்தங்கரை, ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கிட்டை பறித்து முன்னேறிய வகுப்பினருக்கு கொடுத்த மத்திய அரசை கண்டித்து தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், உழவர் பேரியக்க மாநில துணைச் செயலாளர் கிள்ளிவளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சக்தி, சாக்கன் சர்மா, கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொண்டரணி மாநில துணைச்செயலாளர் அதியமான், மாநில துணைச் செயலாளர் தேவ கலையழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் ராமன், சிவஞானம், செந்தில், அம்பேத் வளவன், பொன் சுரேஷ், ஜெகநாதன், வடிவேலு, அம்பேத் வளவன், சிவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஊத்தங்கரையில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 4 ரோட்டில் நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். ஜிம் மோகன், முனிராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை செயலாளர்கள் அசோகன், ஜெயலட்சுமி, சூளகரை அம்பேத்கர், தொகுதி செயலாளர் பிரபாகரன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் குபேந்திரன், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முத்துக்குமார், ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில், சூரியவளவன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 10 சதவீதம் பறிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை கண்டித்தும், வங்கி அதிகாரிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நலிவடைந்தவர்களின் இடஒதுக்கீட்டில் கை வைப்பது மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான செயலை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News