ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை விதிக்கப்பட்டதால் அதன் அருகே உள்ள சங்குமால் கடலில் நீராடிய பக்தர்கள்

அக்னி தீர்த்த கடலில் நீராட தடை: சங்குமால் கடலில் நீராடிய பக்தர்கள்

Published On 2021-09-07 04:01 GMT   |   Update On 2021-09-07 04:01 GMT
தடை காரணமாக சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடியது. சங்குமால் கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதுபோல் ஆவணி மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இதனால் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட செல்லும் அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டு இருந்தன.

அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட நேற்று வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சங்குமால் அருகே உள்ள கடல் பகுதியில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News