செய்திகள்
கடைகளுக்கு சீல்

வாலாஜாவில் விதிமுறைகளை மீறிய 7 கடைகளுக்கு சீல்

Published On 2021-06-16 12:02 GMT   |   Update On 2021-06-16 12:02 GMT
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்போன் கடை, இறைச்சி கடை, முடிதிருத்தும் கடை, பாத்திரக்கடை, அரிசி கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாலாஜா:

வாலாஜாவில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் பொறியாளர் நடராஜன், துப்புரவு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், களப்பணி உதவியாளர் மகேந்திரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விநாயகம் ஆறுமுகம், தாவூத் ஆகியோர் நேற்று வாலாஜா நகரில் ஆய்வு செய்தனர்.

அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்போன் கடை, இறைச்சி கடை, முடிதிருத்தும் கடை, பாத்திரக்கடை, அரிசி கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 7 கடைகளுக்கும் ரூ.10,100 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News