செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல்

மாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா

Published On 2021-09-22 12:50 GMT   |   Update On 2021-09-22 12:50 GMT
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சஞ்சய் உபத்யாயை வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், வெற்றி பெறுவார் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கையை பொறுத்து மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை அமையும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா சஞ்சய் உபத்யாய்-ஐ வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜனதா நிறுத்தியுள்ள வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால் இன்னும் 20 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு தேவை. கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என அம்மாநிலத்திற்கான பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில் ‘‘அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். 56 எம்.எல்.ஏ.-க்களை வைத்துள்ள சிவசேனா கட்சியில் இருந்து முதலமைச்சராக முடியும், 54 எம்.எல்.ஏ.-க்களை வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து துணை-முதலமைச்சராக முடியும் என்றால், ஏன் நாங்கள் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்த முடியாது?.

எங்களுக்கு இன்னும் 20 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு மட்டுமே தேவை. மகாராஷ்டிராவில் இருந்து எங்களுடைய வேட்பாளர் நிச்சயமாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்.’’ என்றார்.
Tags:    

Similar News