ஆன்மிகம்
வெக்காளியம்மன் கோவிலில் கருவறையை சுற்றி அர்த்த மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

உறையூர் வெக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் 45 நாட்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பு

Published On 2021-10-21 07:13 GMT   |   Update On 2021-10-21 07:13 GMT
உறையூர் வெக்காளியம்மன் கோவில் அர்த்தமண்டபம் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்கர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மான் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் மூலஸ்தானம் மற்றும் அர்த்தமண்டபம் 1993-ம் ஆண்டு செங்கல் மூலம் கட்டப்பட்டன. தற்போது ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் கருங்கற்களால் அர்த்தமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த மாதம் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு மூலவர் அம்மன் மரக்கதவுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

அர்த்தமண்டப பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கருங்கல் கொண்டுவரப்பட்டு கடந்த ஒரு வருடமாக கோவில் அலுவலகம் பின்புறத்தில் நடந்து வருகிறது. அர்த்தமண்டபம் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்கர்கள் மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பணிகள் அடுத்த 45 நாட்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பக்தர்கள் உற்சவ அம்மனை வழிபட்டு கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News