உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகள் தோறும் சி.சி.டி.வி. கேமரா

Published On 2022-01-15 06:51 GMT   |   Update On 2022-01-15 06:51 GMT
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகள் தோறும் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்
அரியலூர்:


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடாந்து நடந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆலோசனையின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மணிசேகர் தனது சொந்த செலவில்,   44  சி.சி.டி.வி. கேமராக்களை, அப்பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தலைவர் மணிசேகரன் முன்னிலையில்,  ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:&

வாரியங்காவல் பகுதிகளில் பல இடங்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கிராமம் தோறும் அனைத்து கிராமங்களிலும் கண்காணிக்க போலீசார் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஒவ்வொரு சி.சி.டி.வி. கேமராவும் ஒரு போலீசார் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் விலை உயர்ந்த பொருட்களை, நகைகளை வீட்டில் வைத்து விட்டு செல்லக் கூடாது. அவற்றை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வீடுகளிலும், கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மூலம் திருடர்களை எளிதில் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் திருட்டு சம்பவங்களை குறைக்கவும் முடியும் என்றார்.

Tags:    

Similar News