செய்திகள்
கமல்ஹாசன்

காலில் பொருத்திய கம்பி அகற்றம்- கமல்ஹாசன் வீடு திரும்பினார்

Published On 2019-11-28 06:13 GMT   |   Update On 2019-11-28 06:13 GMT
காலில் பொருத்திய கம்பி அகற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் மாடிப்படிகளில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது.

சிகிச்சையின்போது வைக்கப்பட்ட கம்பியை தற்போது நீக்குவதற்காக சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றார்.

கம்பி அகற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். அவர் ஒரு சில வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அதன் பிறகே அவர் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் அவர் ஜனவரி மாதமே செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தனது அரசியல் பணிகளையும் அவர் ஜனவரி மாதமே தொடங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருந்தால் அந்த தேர்தலில் கமல்ஹாசன் பிரசாரத்திற்கு செல்வது சந்தேகமே என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News