ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-10-29 06:52 GMT   |   Update On 2021-10-29 06:52 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பொறுத்தவரை நடைபெறும் வழிபாடுகளில் ஒன்றாகவே கதகளி, திருவிழா நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இது காலம் காலமாக நடந்து வந்த ஐதீகம் ஆகும்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐப்பசி திருவிழா நடைபெறும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இதுபற்றி கோவில் மேலாளர் மோகன் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கோவில் திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி காலை 9.22 மணி முதல் 9.45 மணிக்குள் கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது.

அன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகள், ஸ்ரீபலியுடன் திருவிழா நடைபெறும். பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை இருப்பதால், கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, கதகளி ஆகியவை நடைபெறாது. 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சியும், 10-ந்தேதி வேட்டையும், அதாவது சிவன் கோவிலுக்கு சுவாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11-ந்தேதியன்று சுவாமி தளியல் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பொறுத்தவரை நடைபெறும் வழிபாடுகளில் ஒன்றாகவே கதகளி, திருவிழா நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. இது காலம் காலமாக நடந்து வந்த ஐதீகம் ஆகும். ஆனால் திருவட்டார் கோவிலின் முக்கிய நிகழ்வான கதகளி இல்லாமல் திருவிழா நடப்பது பக்தர்களை வேதனைப்பட வைத்துள்ளது. எனவே திருவிழாவின் போது கதகளி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News