செய்திகள்
சென்னையில் இன்று பெய்த மழையில் குடைபிடித்து செல்லும் பெண்களை படத்தில் காணலாம் . (இடம்: சென்ட்ரல்)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை

Published On 2021-09-30 05:37 GMT   |   Update On 2021-09-30 05:37 GMT
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலையில் இருந்தே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காலை 9 மணிமுதல் மழைபெய்யத்தொடங்கியது. நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது.



புரசைவாக்கம் , பெரம்பூர், அண்ணாநகர், எழும்பூர், வடபழனி, அடையாறு, வேளச்சேரி, கோயம்பேடு, மதுரவாயல், அயனாவரம், மாதவரம், புழல், திருவொற்றியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ததால் காலையில் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தவாரே சென்றனர். பள்ளி மாணவர்களும் பஸ் மற்றும் சைக்கிள்களில் பள்ளிக்கு சென்றனர்.

இதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. செங்குன்றம், பொன்னேரி, தாமரைபாக்கம், பெரியபாளையம், பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News