ஆன்மிகம்
தர்காவில் சந்தனக்கூடு விழா

பொன்மலை ரெயில்வே காலனி தர்காவில் சந்தனக்கூடு விழா

Published On 2021-03-09 02:45 GMT   |   Update On 2021-03-09 02:45 GMT
திருச்சி பொன்மலை ரெயில்வே காலனி நார்த் - டி பகுதியில் பழமைவாய்ந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி பொன்மலை ரெயில்வே காலனி நார்த் - டி பகுதியில் பழமைவாய்ந்த தர்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

இதையொட்டி நிஷான் கமிட்டியினர் சார்பில் சந்தனக்கூடு கீழ அம்பிகா புரத்தில் இருந்து புறப்பட்டு தங்கேஸ்வரி நகர், மிலிட்டரி காலனி வழியாக, ரெயில்வே காலனி நார்த்-டி பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்தடைந்து.

பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புகளை அன்பின் நிமித்தமாக பரிமாறிக்கொண்டனர்.

இந்த விழாவில் சாதி மத பேதமின்றி ஏராளமான முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சமத்துவமாக கலந்து கொண்ட சமபந்தி போஜனம் நடைபெற்றது.
Tags:    

Similar News