தொழில்நுட்பம்
ஏர்டெல்

3Gbps திறன் கொண்ட ஏர்டெல் 5ஜி விரைவில் வெளியீடு

Published On 2021-01-29 06:07 GMT   |   Update On 2021-01-29 06:07 GMT
ஏர்டெல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி சோதனையை ஐதராபாத் நகரில் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை வர்த்தக நெட்வொர்க்கில் நடத்தப்பட்டது. வெற்றிகர சோதனையை தொடர்ந்து நாடு முழுக்க விரைவில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் தயாராகி வருகிறது.

இதற்கென ஏர்டெல் நிறுவனம் Sub-6GHz NSA நெட்வொர்க் தளத்தை 1800MHz பேண்ட் பயன்படுத்தி இருக்கிறது. இதன் உபகரணம் 1800/2100/2300MHz மற்றும் sub-GHz பேண்ட்களான 800/900 MHz உள்ளிட்டவைகளுடன் இயங்கும் திறன் கொண்டது.



ஆற்றல் மிக்க ஸ்பெக்ட்ரம் ஷேரிங் தொழில்நுட்பம் கொண்டு ஏர்டெல் நிறுவனம் ஒரே ஸ்பெக்ட்ரமில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்களை இயக்க இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

4ஜி சேவையை போன்றே இந்த தொழில்நுட்பமும் படிப்படியாக பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சோதனைகளில் ஒப்போ ரெனோ5 ப்ரோ மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 3Gbps வேகத்தில் இணைய வசதி கிடைத்ததாக கூறப்படுகிறது. இது முன்கூட்டியே சோதனையை துவங்கிய ஜியோவின் 1Gbps-ஐ விட அதிகம் ஆகும்.
Tags:    

Similar News