செய்திகள்
பிரதமர் மோடி

பக்ரீத் பண்டிகை- நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-07-21 06:39 GMT   |   Update On 2021-07-21 06:39 GMT
கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த பண்டிகை தியாகப்பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது.



கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் பகிர்ந்து அளிக்கும் பண்பை போதிக்கும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களிடம் உள்ள உணவையும், பொருளையும் பகிர்ந்து அளிக்கும் தினமாகும் இது.

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈத் முபாரக்! ஈத்-உல்-அதாவுக்கு வாழ்த்துகள். அதிக நன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்த நாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News