செய்திகள்
திமுக தலைவருடன் டிஆர் பாலு

தபால் வாக்குகளால் 15 சதவீத முறைகேடு வாய்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

Published On 2020-12-01 12:21 GMT   |   Update On 2020-12-01 12:21 GMT
பீகார் தேர்தலை போன்று மற்ற சட்டசபை தேர்தல்களிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில் திமுக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியிருந்தது.

இதனை அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் அக்டோபர் 3-ம் ​தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனை நீக்கும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை 15 சதவீதம் வாக்குகள் அளவுக்கு முறைகேடு நடக்க வழிவகுக்கும் என சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே,  சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகள், நபர்களுடன் ஆலோசனை நடத்தி நியாயமான மற்றும் ஒளிவுமறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்த வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News