செய்திகள்
கனமழை காரணமாக தேங்கியுள்ள நீர்

விடிய விடிய மழை- வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி

Published On 2021-08-21 08:50 GMT   |   Update On 2021-08-21 08:50 GMT
டெல்லிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 13.8 செ.மீ. மழை பதிவானது.

இது இந்த சீசனில் பெய்த ஒரு நாளைய அதிகபட்ச மழையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



பலத்த மழை காரணமாக டெல்லி நகர சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றன. சில இடங்களில் வீடுகளில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. வெள்ளம் காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டெல்லிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.




Tags:    

Similar News