செய்திகள்
சரத் பவார்

கொல்கத்தா பேரணியில் பங்கேற்கும் பிரதமருக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? - சரத் பவார்

Published On 2021-03-07 18:02 GMT   |   Update On 2021-03-07 18:02 GMT
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது.
ராஞ்சி:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ராஞ்சியில் உள்ள ஹார்மு நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் பொறுப்பு என்பது சகோதரத்துவத்தை உருவாக்குவது தான். ஆனால் பா.ஜ.க. நாட்டில் வகுப்புவாதத்தைப் பரப்புகிறது.

டெல்லியின் புறநகரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். கொல்கத்தாவில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு நேரம் உள்ளது. ஆனால், விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை.

மத்திய அரசு விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு ஆகியவை மூலம் பா.ஜ.க. எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆள்கிறதோ அந்த மாநிலங்களில் அவர்களை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு என குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News