செய்திகள்
கோப்பு படம்

கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கிய 4 போலீசார் சஸ்பெண்டு

Published On 2019-12-02 10:41 GMT   |   Update On 2019-12-02 10:41 GMT
கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான வேன் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் சாமி மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூர் கூட்டுரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வேனை நிறுத்தி சோதனை போட்டனர். அதில் ரூ. 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேனை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர்.

வேன் டிரைவரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக  விழுப்புரத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

வேன் உரிமையாளரான பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் போலீசாரை கண்டதும் வேனில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் உள்பட 2 பேரையும் பிடிக்க கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். மேலும் வேனை குருபரபள்ளி அருகே வழி மறித்த போலீசார் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு தொடர்ந்து வேன் செல்ல அனுமதித்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குருபரபள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு முருகன், போலீஸ் டிரைவர் சரவணன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு ஏட்டு உதயகுமார் ஆகிய 4 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் சஸ்பெண்டு செய்தார்.

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க அனுமதி கிடையாது. இதனால் பெங்களூருவில் இருந்து குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்கள். புகையிலை பொருட்கள் என்பதை மறைத்து ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வருவதாக ஜி.எஸ்.டி. வெப்சைட்டில் பதிவு செய்து புகையிலைபொருட்களை கடத்தி வருவதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 
Tags:    

Similar News