லைஃப்ஸ்டைல்
பழச்சாறு பருகும் குழந்தைகளுக்கு...

பழச்சாறு பருகும் குழந்தைகளுக்கு...

Published On 2021-01-08 04:13 GMT   |   Update On 2021-01-08 04:13 GMT
குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் லின் எல்.மூரே கூறுகையில், ‘‘பாலர் பருவத்தில் தினமும் ஒன்றரை கப் பழச்சாறு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழ ஜூஸ்களை வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டவர்கள், அரை கப்புக்கும் குறைவாக பருகிய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இளமைப்பருவத்தில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். 

அத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் பழச்சாறு பருகிய குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களை எடை அதிகரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடிவதில்லை. எந்தவிதமான பக்கவிளைவையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. 

பழங்கள் சாப்பிடுவது, ஆயுட்காலம் முழுவதும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் பழச்சாற்றைத் தவிர்ப்பது உணவு பழக்கவழக்கங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’’ என்கிறார். 
Tags:    

Similar News